தளபதி விஜயின் லியோ பட இசை வெளியீட்டு விழா திடீர் ரத்து... உரிய காரணத்துடன் படக்குழு விளக்கம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தளபதி விஜயின் லியோ பட இசை வெளியீட்டு விழா திடீர் ரத்து,Thalapathy vijay in leo audio launch cancelled due to safety constraints | Galatta

ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழு அதற்கான உரிய காரணத்தையும் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக பல்வேறு விதமான சர்ச்சைகளும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அவ்வாறாக எந்த விதமான தடைகளும் இசை வெளியீட்டு விழாவிற்கு இல்லை என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மும்மரமாக நடைபெற்று வந்தன. இதனிடையே தற்போது வேறு சில காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்திருப்பதாக படக் குழு அதிகாரப்பூர்வமாய் அறிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் 2வது முறையாக இணைந்த தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜய்யின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் வகையில் பக்கா ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக நியூ திரைப்படம் இருக்கும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்தன அதற்கான முன் ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. 

இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது இது குறித்து பட குழு தனது X பக்கத்தில், “மிக அதிகமான டிக்கெட்டுகள் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து இருக்கிறோம். ரசிகர்களை மதிக்கும் வகையில் அவர்கள் எதிர்பார்த்தபடியே தொடர்ச்சியாக நிறைய அப்டேட்கள் கொடுக்க இருக்கிறோம். முக்கிய குறிப்பு: சிலர் கற்பனை செய்து சொல்வது போல இதில் எந்த விதமான அரசியல் அழுத்தங்களோ வேறு சில காரணங்களோ இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறது. தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் பேச்சை எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தற்போது ஏமாற்றமடைந்து இருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவின் இந்த முடிவு ஏற்கக்கூடிய ஒன்று என்பதால் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்.
 

Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.

In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.

P.S. As many would imagine, this is not due to political pressure or any other…

— Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023