நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சச்சி. நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ரெமோ மற்றும் தளபதி விஜய் நடித்த கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் சச்சி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ்-ன் மச்சானான இயக்குனர் சச்சியின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள விஜய ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் ,சதீஷ் ,மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்) , நிப்பு சாமி , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன் , ஆகாஷ் ,குறைஷி, தினேஷ் கண்ணன் , ஜோமின், விஜய் டிவி தீனா,பாலா, DSK, அஷார், தங்கதுரை, சதீஷ் KPY, அடம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையை சேர்ந்த மருத்துவரான சரண்யாவை இயக்குனர் சச்சி திருமணம் செய்து கொண்டார். பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
vaibhav sixer movie young director chachi marriage photos goes viral