"தியேட்டருக்குள் புகுந்த குரங்கு!"- ஆதிபுரூஷ் படம் பார்க்க ஆஞ்சநேயர் வந்ததாக கொண்டாடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ

ஆதிபுரூஷ் வெளியான திரையரங்கிற்கு குரங்கு வந்த வீடியோ,monkey entered into theatre and watches prabhas in adipurush movie | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நடிகர் பிரபாஸின் ஆதிபுரூஷ் திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கில் குரங்கு ஒன்று நுழைந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வரும் அதிரடி படமான சலார் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுரூஷ் திரைப்படம் இன்று ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே உலக அளவில் 120 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் ஆதிபுரூஷ் வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் தொடர்ந்து வரும் நாட்களும் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் ஆதிபுரூஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளுக்காகவே கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆதிபுரூஷ் திரைப்படம் ரிலீஸாகி இருக்கும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி இருக்கின்றனர். இன்று படம் வெளியான போது ஆஞ்சநேயருக்காக ஒதுக்கப்பட்ட அந்த இருக்கைக்கு காவி துணி போற்றப்பட்டு ஆஞ்சநேயர் உருவப்படங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறியது. இந்நிலையில் இன்று ஆதிபுரூஷ் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை காண ஆஞ்சநேயரே நேரில் வந்தார் என்று சொன்னால் எப்படி இருக்கிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம் வட இந்தியாவில் ஆதிபுரூஷ் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரு திரையரங்கில் ஆபரேட்டர் அறையில் இருந்து ஒரு குரங்கு படத்தை எட்டிப் பார்த்துள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆஞ்சநேயரே நேரில் வந்து ஆதிபராஸ் படத்தை பார்க்கிறார் என்று ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என கூச்சலிட ஆரம்பித்தனர்.  வைரலாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"நா ரெடி"- தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் லியோ பட முதல் பாடல்... பக்கா மாஸ் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அசோக் செல்வன் - சரத்குமாரின் செம்ம த்ரில்லர் போர் தொழில் உருவான விதம்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

அசோக் செல்வன் - சரத்குமாரின் செம்ம த்ரில்லர் போர் தொழில் உருவான விதம்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அட்டகாசமான வீடியோ இதோ!

முன்பதிவில் மாஸ் காட்டிய பிரபாஸின் ஆதிபுரூஷ்... முதல் நாளே இத்தனை கோடியா? அதிரடி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
சினிமா

முன்பதிவில் மாஸ் காட்டிய பிரபாஸின் ஆதிபுரூஷ்... முதல் நாளே இத்தனை கோடியா? அதிரடி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!