"நா ரெடி"- தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் லியோ பட முதல் பாடல்... பக்கா மாஸ் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் பிறந்தநாளில் வரும் லியோ பட முதல் பாடல்,thalapathy vijay birthday treat from leo movie first single naa ready | Galatta

தளபதி விஜயின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக நா ரெடி எனும் பாடல் வர இருக்கிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாயகர்களில் ஒருவராக சொல்லிக்கும் தளபதி விஜய் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 68வது படமாக தயாராகும் தளபதி 68 படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக தளபதி விஜய் இணைகிறார். இத்திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர்.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் பரிசு ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி எனும் பாடல் தளபதி விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று  அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால் இதனை அறிவிக்கும் வகையில் வெளிவந்த புதிய போஸ்டரில் இருக்கும் தளபதி விஜயின் புதிய மாஸான லுக், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பட பூஜை, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ என அனைத்திலும் வேறு ஒரு லுக்கில் தளபதி விஜய் இருந்த நிலையில் இந்த போஸ்டரில் இருக்கும் லுக் தளபதி விஜய் இதுவரை இல்லாத புதிய பரிமாணத்தில் லியோ படத்தில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களை அதிரவிட்ட தளபதி விஜயின் லியோ பட நா ரெடி பாடல் போஸ்டர் இதோ…
 

First Single #NaaReady on @actorvijay Anna's Birthday #Leo 🔥🧊 pic.twitter.com/xG5T46GWyR

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 16, 2023

சினிமா

"கில்லர் படம் எப்போது?"- மாஸ் அப்டேட் உடன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வேண்டுகோள் வைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!

ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானாவின் LGM பட ரொமான்டிக் ட்ரீட்... MSதோனி தயாரிப்பில் முதல் படைப்பின் முதல் பாடல் இதோ!
சினிமா

ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானாவின் LGM பட ரொமான்டிக் ட்ரீட்... MSதோனி தயாரிப்பில் முதல் படைப்பின் முதல் பாடல் இதோ!