மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட டிரைலர் வெளியீடு,udhayanidhi stalin in maamannan movie trailer | Galatta

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது.இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் தான். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனவே முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால் மாமன்னன் தான் தனது நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனது முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களால் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த தரமான படைப்பாக மாமன்னன் படம் தயாராகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் & வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மாமன்னன் படத்தில்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது "இது கொஞ்சம் வில்லன் மாதிரியும் இருக்கும்" என வடிவேலு அவர்கள் தெரிவித்து இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரை உலகை சேர்ந்த முன்னணி நட்சத்திர இயக்குனர்களும் நடிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது வெளியான மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லரில் வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் படம் ரிலீஸாகும் என்ற அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக மிகப்பெரிய எதிர்பார்ப்பான ஏற்படுத்தியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக இருக்கும். வடிவேலுவின் அட்டகாசமான புதிய அவதாரமும் உதயநிதி ஸ்டாலினின் மிரட்டலான ஆக்ரோஷமும் ஃபகத் பாசிலின் மிருகத்தனமான நடிப்பும் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்ட ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை படம் வேறு ஒரு தளத்தில் நின்று பேசும் என்பதை காட்டுகிறது. மிரள வைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

முன்பதிவில் மாஸ் காட்டிய பிரபாஸின் ஆதிபுரூஷ்... முதல் நாளே இத்தனை கோடியா? அதிரடி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
சினிமா

முன்பதிவில் மாஸ் காட்டிய பிரபாஸின் ஆதிபுரூஷ்... முதல் நாளே இத்தனை கோடியா? அதிரடி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

சினிமா

"கில்லர் படம் எப்போது?"- மாஸ் அப்டேட் உடன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வேண்டுகோள் வைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!