தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடியான லியோ... ஸ்வீட்டான அடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் லியோ பட அடுத்த அறிவிப்புகள் குறித்த பதிவு,Thalapathy vijay lokesh kanagaraj leo bloody sweet movie next updates | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. பக்கா மாஸான ப்ரோமோவோடு வெளிவந்த தளபதி 67 திரைப்படத்தின் லியோ - பிளடி ஸ்வீட் எனும் டைட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்கும் லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேதீவ் தாமஸ், சாண்டி மாஸ்டர் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற, அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளிவந்த நிலையில், தற்போது துப்பாக்கி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ரயிலில் செல்லும் போய் வரவா எனும் பாடல் காட்சியை குறிப்பிட்டு, “போய் வரவா… இன்னும் நிறைய ஸ்வீட்டான அப்டேட்டுகளோடு அடுத்த முறை உங்களை சந்திக்கிறோம் நண்பா” என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
 

Poi varava 💔
Inum nariya sweet aana updates oda will meet you next time nanba 🤜🤛#Leo pic.twitter.com/FpiE67mKYy

— Seven Screen Studio (@7screenstudio) February 4, 2023

கார்த்தியின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2ல் தமிழில் அறிமுகமாகும் முன்னணி நடிகை? துணிவு தயாரிப்பாளரின் அதிரடி பதில் இதோ!
சினிமா

கார்த்தியின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2ல் தமிழில் அறிமுகமாகும் முன்னணி நடிகை? துணிவு தயாரிப்பாளரின் அதிரடி பதில் இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் LEO-ல் விக்ரம் பட ஏஜென்ட் டீனா..? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் LCU! விவரம் இதோ
சினிமா ஸ்பெஷல்ஸ்

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் LEO-ல் விக்ரம் பட ஏஜென்ட் டீனா..? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் LCU! விவரம் இதோ

ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்குமாரின் துணிவு பட வேற லெவல் அறிவிப்பு... கவனம் ஈர்க்கும் கலக்கலான ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்குமாரின் துணிவு பட வேற லெவல் அறிவிப்பு... கவனம் ஈர்க்கும் கலக்கலான ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!