லியோ தாஸ் வர்ரார் போட்றா வெடிய!- தளபதி விஜயின் பிளடி ஸ்வீட்டாக லோகேஷ் கனகராஜின் ஆக்சன் ட்ரீட்டாக வந்த லியோ பட ட்ரெய்லர் இதோ!

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் லியோ பட ட்ரெய்லர் வெளியீடு,thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now | Galatta

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் மிரட்டலான ஆக்சன் பேக்கேஜாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமான இந்த லியோ திரைப்படம் நாளுக்கு நாள் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள், VFX பணிகள் அனைத்தும் நிறைவடைந்து சென்சாரையும் 15 நாட்களுக்கு முன்பே முடித்து ரிலீசுக்கு தயாராகி விட்டது லியோ படம். தளபதி விஜயின் திரைபயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பிய இந்த லியோ திரைப்படம் இதுவரை வெளிவந்த அவரது திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் வெளியாகும் திரைப்படம் என்ற அந்தஸ்தையும் பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்து மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டு இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 

தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த லியோ திரைப்படத்தில் அதையும் தாண்டி ஆக்ஷனில் மற்றொரு சர்ப்ரைஸ் விஷயமாக பனி நிறைந்த காஷ்மீரின் காட்டுப் பகுதிக்குள் கழுதைப்புலியுடன் தளபதி விஜய் சண்டையிடும் அதிரடியான ஒரு ஆக்சன் காட்சி படத்தில் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஆக்ஷன் காட்சிக்காக ஸ்பெஷலான VFX பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இது தியேட்டரில் மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில் அறிவித்தபடியே ட்ரெய்லர் இன்று அக்டோபர் 5ஆம் தேதி தற்போது வெளிவந்துள்ளது. அட்டகாசமான நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களுக்கு பக்கா ஆயுத பூஜை ட்ரீட்டாக அமையும் இந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிளடி ஸ்வீட்டாக வந்த தளபதி விஜய்யின் அதிரடியான லியோ பட ட்ரெய்லர் இதோ...