அட்டகாசமான புதிய ஸ்டைலில் விஜய்... தளபதி 68 பட லுக் இதுதானா..?- சோஷியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

தளபதி விஜயின் அட்டகாசமான புதிய புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது,thalapathy vijay latest photo with new look | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நாயகரான தளபதி விஜய் அட்டகாசமான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை அதிர வைத்திருக்கிறது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் லியோ திரைப்படம்  நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் பக்கா ஆக்சன் ட்ரீட்டாகவும் விஷுவல் ட்ரீட்டாகவும் லியோ படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தனது 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் தளபதி விஜய் இணைந்திருக்கிறார். ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் உட்பட படக்குழுவினர் அதற்காக அமெரிக்கா சென்றனர். உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. எனவே தளபதி 68 திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான சர்ப்ரைஸ்  ட்ரீட் காத்திருப்பதாக தெரிகிறது. 

முன்னதாக கடந்த அக்டோபர் 2ம் தேதி பூஜை உடன் தளபதி 68 திரைப்படம் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பிரபுதேவா, டாப் ஸ்டார் பிரசாந்த், மோகன், ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கதாநாயகிகளாக மீனாக்ஷி சௌத்ரி, பிரியங்கா அருள் மோகன் இணைந்து இருப்பதாகவும் சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராததால் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தற்போது பட பூஜை புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்டுகள் அனைத்தும் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருக்கிறார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது தளபதி விஜயின் புதிய புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. லியோ திரைப்படத்தின் லியோ தாஸ் கேரக்டர் போலவே செம்ம யங் ஸ்டைலிஷ் லுக்கில் தளபதி விஜயின் இந்த அட்டகாசமான லுக் தான் தளபதி 68 திரைப்படத்தின் லுக்கா என தற்போது இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தளபதி விஜய்யின் புதிய ஸ்டைலில் வந்த அந்த அசத்தலான புகைப்படம் இதோ...
 

Latest Click of #ThalapathyVijay 🔥@actorvijay @anirudhofficial #ThalapathyVijay #Leo #Leofilm #Leobookings #LeoFDFS #LokeshKanagaraj #Anirudh #Trisha #SanjayDutt #Thalapathy68 #Galatta pic.twitter.com/rvleleNJyR

— Galatta Media (@galattadotcom) October 17, 2023