தளபதி விஜயின் லியோ ரிலீசுக்கு முன்பே வட அமெரிக்காவில் வேற லெவல் ரெகார்ட்... இதுவரை எந்த இந்திய படமும் செய்திடாத சாதனை! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ வட அமெரிக்காவில் பெரும் சாதனை,thalapathy vijay in leo pre release crossed one million dollars in north america | Galatta

இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் படைத்திடாத மாபெரும் சாதனையை டிக்கெட்டுகள் முன்பதிவில்லையே தளபதி விஜயின் லியோ திரைப்படம் வட அமெரிக்காவில் பதிவு செய்திருக்கிறது. முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து நாளுக்கு நாள் இயக்க சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய லியோ திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வரும் வியாழக்கிழமை உலகமெங்கும் திரையரங்குகளில் மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம், மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைகிறது என்பதாலும், இந்த முறை 100% லோகேஷ் படம் என்பதாலும் லியோ படத்தின் மீது இந்த எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

தளபதி விஜயின் பக்கா ஆக்சன் ட்ரீட்டாக வெளிவர இருக்கிற இந்த லியோ திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியான தளபதி விஜய் - திரிஷா ஜோடி கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

தொடர்ந்து தனது பாணியில் அசத்தலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்சனை தாண்டி இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிரட்டலான ஒரு காட்சியாக CG உதவியுடன் அட்டகாசமான ஒரு கழுதை புலி சண்டை  காட்சியையும், மிகவும் விறுவிறுப்பான ஒரு சேசிங்  காட்சியையும் ரசிகர்களுக்கு விருந்தாக லியோ திரைப்படத்தில் வைத்திருக்கிறார். ஏற்கனவே டிக்கெட்டுகள் முன்பதிவில் தளபதி விஜயின் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது வட அமெரிக்காவில் ரிலீசுக்கு முன்பே மாபெரும் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இப்போது தளபதி விஜயின் லியோ படம் அட்வான்ஸ் புக்கிங்கில் ஒரு மில்லியன் டாலரை கடந்திருக்கிறது. முன்னதாக இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வந்த RRR திரைப்படம் மட்டும் தான் ஒரு மில்லியனை கடந்த இந்திய படமாக வட அமெரிக்காவில் சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது இந்த சாதனையை தளபதி விஜயின் லியோ படம் ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் தளபதி விஜயின் லியோ படம் ரிலீசுக்கு பிறகு இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

There hasn't been a Million Dollar Premiere film for Indian Cinema in the USA since last year's #RRR, but we've already smashed it with pre-sales 😎👊🏾

The Thalapathy Masssss Rampage… 🔥
And The @PrathyangiraUS Maaaassss Release…. 🤟🏻#LEO#ThalapathyVijay @actorvijaypic.twitter.com/EUHoGlb9UN

— Prathyangira Cinemas (@PrathyangiraUS) October 16, 2023