தளபதி விஜயின் லியோ SPOILER ALERT!: ரோலக்ஸ் ஸ்டைலில் அர்ஜுனின் ஹாரல்ட் தாஸ் என்ட்ரி! துணை நடிகரின் ஸ்பெஷல் பேட்டி இதோ

லியோ படத்தில் ரோலக்ஸ் ஸ்டைலில் அர்ஜுனின் ஹாரல்ட் தாஸ் என்ட்ரி,Vikram movie actor about harold das arjun mass entry in leo | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்சன் கிங் அர்ஜுனனின் ஹாரல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் என்ட்ரி, விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் என்ட்ரி போலவே இருக்கும் என விக்ரம் படத்தில் நடித்த பிரபல துணை நடிகர் தெரிவித்திருக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக வருகிற வியாழக்கிழமை அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் 2வது படமாக தயாராகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் மிரட்டலான காட்சியில் ரோலக்ஸ்-ஆல் தலை வெட்டப்பட்ட ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு தற்போது பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டியில் தளபதி விஜயின்  லியோ படம் குறித்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் முன்னதாக தளபதி விஜயின் லியோ படம் LCUவில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இந்த துணை நடிகர் தொடர்ந்து பேசும்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் .

அப்படி பேசுகையில், “ரோலக்ஸ் டீமும் அர்ஜுனின் ஹாரல்ட் தாஸ் டீமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கிறது அர்ஜுன் சாரும் சிகரெட் பிடிக்கிறார் தலை எடுபவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என சொல்வது போன்ற காட்சிகள் எல்லாம் இடம்பெற்று இருப்பதாக ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஏதாவது இருக்கிறதா?” என கேட்டபோது, “அது எப்படி என்றால் விக்ரம் படத்தில் என் தலையை வெட்டி எப்படி சூர்யா சார் என்ட்ரி கொடுக்கிறாரோ அதேபோல் இந்த படத்தில் ஒருவருடைய கையை வெட்டி அர்ஜுன் சார் என்ட்ரி கொடுக்கிறார் என்பது தெரிகிறது. ஏனென்றால் அவர் கையை வெட்டுவதை நான் பார்த்தேன். எனவே அது தான் அவருடைய என்ட்ரி என்பது எனக்கு தோன்றியது. அதன் பிறகு தான் தளபதி விஜய் சாரே என்ட்ரி ஆகிறார்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த துணை நடிகரின் ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.