தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!

தளபதி விஜயின் வாரிசு படத்தில் தீ தளபதி வீடியோ பாடல்,thalapathy vijay in varisu movie thee thalapathy video song out now | Galatta

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி தளபதி 67 படமான லியோ படத்தில் இணைந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ ப்ளடி ஸ்வீட் திரைப்படம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன் வெளிவந்த அறிவிப்பு ப்ரோமோ வீடியோ இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. முன்னதாக கலைஞர் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசானது. 

முதல்முறையாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்குனர் பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி வீடியோ பாடல் தற்போது வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…
 

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த லியோ படக்குழு... தளபதி 67 டைட்டில் ப்ரோமோவின் சர்ப்ரைஸ் இதோ!
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த லியோ படக்குழு... தளபதி 67 டைட்டில் ப்ரோமோவின் சர்ப்ரைஸ் இதோ!

கார்த்தியின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2ல் தமிழில் அறிமுகமாகும் முன்னணி நடிகை? துணிவு தயாரிப்பாளரின் அதிரடி பதில் இதோ!
சினிமா

கார்த்தியின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2ல் தமிழில் அறிமுகமாகும் முன்னணி நடிகை? துணிவு தயாரிப்பாளரின் அதிரடி பதில் இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் LEO-ல் விக்ரம் பட ஏஜென்ட் டீனா..? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் LCU! விவரம் இதோ
சினிமா ஸ்பெஷல்ஸ்

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் LEO-ல் விக்ரம் பட ஏஜென்ட் டீனா..? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் LCU! விவரம் இதோ