பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் தளபதி விஜயின் லியோ... தென்னிந்திய படங்களிலேயே இதுவரை இல்லாத பெரிய ஓப்பனிங்! அதிரடி அப்டேட்

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் விஜயின் லியோ பட புது அறிவிப்பு,thalapathy vijay in leo gets huge release in europe with 4 season creation | Galatta

தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட ரிலீசுக்கு தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. அனைத்து வயது சினிமா ரசிகர்களும் விரும்பக்கூடிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தற்போது தனது திரைப்பயணத்தில் 67 ஆவது படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. 

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் லியோ திரைப்படம் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.  

லியோ படம் ஆரம்பித்த சமயத்தில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டராக வெற்றி பெற்றதும், கைதி - விக்ரம் படங்கள் இருக்கும் LCUம் லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளன. இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாகிறது. முன்னதாக லியோ திரைப்படத்தின் UK மற்றும் ஐரோப்பிய ரிலீஸ் உரிமத்தை அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிக திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை வெளியிடுவதற்காக 4 சீசன் கிரியேஷன் நிறுவனத்தோடு அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தற்போது கைகோர்த்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.  ஏற்கனவே அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் ஐரோப்பாவிலும் லியோ படம் மிகப்பெரிய அளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிரடி அறிவிப்பு இதோ…
 

#AhimsaEntertainment is teaming up with @4SeasonCreation to push #LEO further across Europe than any South Indian film before! You'll love what we've got planned – record number of countries and lots of memorable fan moments on the way! 😌🥁 pic.twitter.com/kdwcSMFKeD

— Ahimsa Entertainment (@ahimsafilms) June 26, 2023

'விஜய் சார் ரெடியா தான் இருக்காரு!'- தளபதியுடன் இணையும் படத்திற்கான திட்டம் குறித்து பேசிய வெற்றிமாறன்!
சினிமா

'விஜய் சார் ரெடியா தான் இருக்காரு!'- தளபதியுடன் இணையும் படத்திற்கான திட்டம் குறித்து பேசிய வெற்றிமாறன்!

விடாமுயற்சி... ‘அஜித் குமார் படமா?’ ‘மகிழ் திருமேனி படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! வைரல் வீடியோ இதோ
சினிமா

விடாமுயற்சி... ‘அஜித் குமார் படமா?’ ‘மகிழ் திருமேனி படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! வைரல் வீடியோ இதோ

'அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் எப்போது?'- முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ
சினிமா

'அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் எப்போது?'- முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ