தளபதி விஜயின் லியோ படக்குழு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் SNEAK PEEK வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட SNEAK PEEK வீடியோ வெளியீடு,thalapathy vijay in leo movie sneak peek video out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் SNEAK PEEK வீடியோ வெளியானது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தனக்கென தனி பாணியில் அட்டகாசமான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து இருக்கிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக தளபதி விஜயின் திரை பயணத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக உலகம் எங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. மிரள வைக்கும் CG-ல் கழுதைப்புலி உடனான ஒரு மிரட்டலான சண்டைக் காட்சி, அதிரடியான சண்டை காட்சிகள், ACTION PACKED சேசிங் காட்சிகள் என பக்கா ஆக்சன் ட்ரீட் ஆகவும் விஷுவல் ட்ரீட் ஆகவும் வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாடும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர்.

விமர்சன ரீதியாக கொஞ்சம் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும் தளபதி விஜயின் நடிப்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடியான காட்சி அமைப்புகள் அனிருத்தின் மாஸான பின்னணி இசை என லியோ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் லியோ திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. இதே வேகம் தொடரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையை படைக்கும் லியோ திரைப்படம் தென்னிந்திய மற்றும் இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக லியோ திரைப் படத்தின் SNEAK PEEK வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ பட அட்டகாசமான SNEAK PEEK வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.