தங்கலான் SNEAK PEEK: சீயான் விக்ரமின் பிரம்மாண்ட பட ஸ்பெஷல் அப்டேட் உடன் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் பகிர்ந்த புது GLIMPSE இதோ!

சீயான் விக்ரமின் தங்கலான் பட அப்டேட் கொடுத்த டேனியல் கால்டகிரோன்,daniel caltigrone at chiyaan vikram in thangalaan movie dubbing | Galatta

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் மிக முக்கிய அப்டேட் ஒன்றை படத்தில் நடித்திருக்கும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் பகிர்ந்து இருக்கிறார். டப்பிங் ஸ்டுடியோவில் தங்கலான் திரைப்படத்திற்கான டப்பிங் ஈடுபட்டிருக்கும் தனது புகைப்படத்தை "SNEAK PEEK" எனக் குறிப்பிட்டு நடிகர் டேனியல் கால்டகிரோன் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்கிரீனில் தங்கலான் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியின் ஷாட் இருக்கிறது. அதில் சீயான் விக்ரமுக்கு பின்னால் நடிகர் டேனியல் கால்டகிரோன் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கிறார். நடிகர் டேனியல் கால்டகிரோனின் அந்த பதிவு இதோ…

 

Sneak Peek!! pic.twitter.com/UKMJ43w7hc

— Daniel Caltagirone (@DanCaltagirone) November 17, 2023

 
முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் சீயான் விக்ரம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் முதல் முதலில் வெளிவந்த தங்கலான் அறிவிப்பு ப்ரோமோ அனைவரையும் பிரமிக்க வைத்தது. 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக தங்கலான் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக வர இருக்கிறது.

தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது. பார்த்தவுடனே ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் வேறு ஒரு உலகத்திற்குள் இழுக்கும் வகையில் மிரள வைக்கும் காட்சி அமைப்புகள் அசுரத்தனமாக நடித்திருக்கும் சீயான் விக்ரமின் மிரட்டலான நடிப்பு என டீசரின் ஒவ்வொரு வினாடியும் மாபெரும் படைப்புக்கான முன்னோட்டமாக மிகச்சிறந்த விஷுவல் ட்ரீட்டாக இருந்தது என சொல்லலாம். 

இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை  PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட  பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே முதல் பாடல் மற்றும் ட்ரெய்லர் குறித்த இதர அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.