தி வில்லேஜ்: ஆர்யாவின் முதல் வெப் சீரிஸ்... மர்மமான கிராமத்தை மையமாக கொண்ட மிரட்டலான படைப்பின் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

ஆர்யாவின் முதல் வெப் சீரீஸான தி வில்லேஜ் ட்ரெய்லர் வெளியீடு,arya in first web series the village trailer out now | Galatta

நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் முதல் வெப் சீரிஸாக வெளிவர இருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. “கட்டியல்” எனும் மர்மமான ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு அதை சுற்றி நடக்கும் பல்வேறு விதமான அச்சுறுத்தக்கூடிய அமானுஷ்ய விஷயங்களை வைத்து தயாராகி இருக்கிறது இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ். ஒரு நாள் ரோடு ட்ரிப் போவதற்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கிளம்பும் ஆர்யா திக்கு தெரியாத ஒரு நடு காட்டில் டயர் பஞ்சராகி நிற்கிறார். அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சென்று ஏதாவது உதவி பெற போகும்போது கட்டியல் எனும் மர்மமான கிராமம் குறித்து தெரிய வருகிறது. கோரமான உருவம் கொண்ட மர்மமான மனிதர்கள் ஆர்யாவின் குடும்பத்தினரை பிடித்து செல்கின்றனர். அந்த மர்ம மனிதர்கள் யார்? அவர்கள் அப்படி இருப்பதற்கான காரணம் என்ன? அவர்கள் மனிதர்களை வேட்டையாடுவதற்கான காரணங்கள் என்ன? அதை சார்ந்து நடக்கும் அதிரடியான விஷயங்கள் என்னென்ன? என்று ஒரு பக்கா திரில்லர் வெப் சீரியஸாக அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ் இருக்கும் என்பதை தற்போது வெளிவந்திருக்கும் இந்த ட்ரெய்லர் காட்டுகிறது. மிரள வைக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸ் ட்ரெய்லர் இதோ…

 

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த அவள் எனும் ஹாரர் படத்தையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் எனும் திரள திரைப்படத்தையும் இயக்கிய மிலின்ட் ராவ் தி வில்லேஜ் வெப் சீரிசை இயக்கியுள்ளார். அஸ்வின் ஸ்ரீவட்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷமிக் தஸ்குப்தாவின் தி வில்லேஜ் என்ற கிராஃபிக் ஹாரர் நாவலை தழுவி அதே பெயரில் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனரும் தளபதி விஜயின் லியோ படத்தின் வசனகர்த்தாவுமான தீரஜ் வைத்தி , தீப்தி கோவிந்தராஜன் இருவரும் இயக்குனர் மிலின்ட் ராவ் உடன் இணைந்து இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ்க்கு திரைக்கதை வசனங்களை எழுதியுள்ளனர். நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸில் நடிகை திவ்யா பிள்ளை கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், சன்னி, முத்துக்குமார், கலை ராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் தி வில்லேஜ் வெப் சீரிஸில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வருகிற நவம்பர் 24ஆம் தேதி முதல் தி வில்லேஜ் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளி வருகிறது. ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்திருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸ்க்கு கிரீஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து இருக்கிறார். சினேகன் , ஷில்பா நடராஜன், குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் & "பிக் பாஸ்" ஐக்கி பெர்ரி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த தி வில்லேஜ் வெப் சீரிஸ்க்கு தினேஷ் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.