தளபதி விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்... ட்ரெண்டாகும் லியோ பட "ORDINARY PERSON" பாடல் லிரிக் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட ORDINARY PERSON பாடல் லிரிக் வீடியோ,Thalapathy vijay in leo movie ordinary person lyric video out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து ORDINARY PERSON பாடல் லிரிக் வீடியோ வெளியானது. தற்போது லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தனது அடுத்த திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தை தளபதி விஜய் தொடங்கிவிட்டார். முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் பூஜை உடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனிடையே தற்போது வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஆக்சன் ட்ரீட்டாக மட்டுமல்லாமல் பக்கா VISHUAL ட்ரீட்டாகவும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் லியோ திரைப்படம் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸ் ஆனது. லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

தளபதி விஜய் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியுடன் கழுதைப்புலி உடனான மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் அந்த காட்சியை புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் மற்றொரு முக்கியமான ஒரு சேசிங் காட்சியும் மிகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திலிருந்து அட்டகாசமான "ORDINARY PERSON" எனும் பாடலை ராக்ஸ்டார் அனிருத் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - அனிருத் படங்களில் இது மாதிரி ஸ்பெஷலான ஆங்கில பாடல்களை எழுதும் மர்மமான பாடலாசிரியர் HEISENBERG எழுதியிருக்கும் இந்த "ORDINARY PERSON" பாடலை ஜோனிதா காந்தி பாடியிருக்கிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லியோ திரைப்படத்தின் "ORDINARY PERSON" பாடல் லிரிக் வீடியோ இதோ…