தளபதி விஜயின் லியோ பட அடுத்த ட்ரீட்... ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த IM SCARED பாடல் இதோ!

தளபதி விஜயின் லியோ பட IM SCARED பாடல் வெளியீடு,Thalapathy vijay in leo movie im scared song out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து IM SCARED பாடல் வெளியானது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஆக்சன் ட்ரீட்டாக மட்டுமல்லாமல் பக்கா VISHUAL ட்ரீட்டாகவும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் லியோ திரைப்படம் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸ் ஆனது. லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

தொடர்ந்து தனது பாணியில் அசத்தலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். தளபதி விஜய் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியுடன் கழுதைப்புலி உடனான மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் அந்த காட்சியை புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் மற்றொரு முக்கியமான ஒரு சேசிங் காட்சியும் மிகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்திய இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படமாக 148.75 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ திரைப்படம் ரிலீசான முதல் வாரத்திலேயே நாட்களிலேயே 461 கோடி ரூபாய் வசூலித்து தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் உச்சத்தை லியோ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திலிருந்து அட்டகாசமான "IM SCARED" எனும் பாடலை ராக்ஸ்டார் அனிருத் தற்போது வெளியிட்டு இருக்கிறார். படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் இடம்பெற்ற இந்த IM SCARED பாடல் படத்தில் அந்த காட்சியை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்த IM SCARED பாடல் தற்போது வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அட்டகாசமான அந்த பாடல் இதோ… 
 

Pause. Play. Repeat. ⏯️🫨

You’ve asked for #ImScared and here it is! ❤️‍🔥

Stream it here 💣🔗 https://t.co/6aMGljBL6X

🎙️@anirudhofficial
🖊️ #Heisenberg #Thalapathy @actorvijay sir @7screenstudio @Dir_Lokesh @Jagadishbliss #Leo pic.twitter.com/1lFtPFVpAr

— Sony Music South (@SonyMusicSouth) October 27, 2023