ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி விஜயின் லியோ... UK விநியோகஸ்தர் பகிர்ந்த அதிரடியான தகவல் இதோ!

தளபதி விஜயின் லியோ படம் UKவில் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் சாதனை,thalapathy vijay in leo movie 50k tickets sold in uk advance booking | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக UKவில் லியோ படத்தை வெளியிட்டு இருக்கும் அஹிம்ஷா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை உடன் தொடங்கப்பட்ட இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக  உருவாகி இருக்கிறது லியோ திரைப்படம். 

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி ஸ்பெஷல் காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தளபதி விஜயின் திரைப்படத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ படத்தை வெளியிடுவதற்கான பிரம்மாண்ட திட்டங்களை படக்குழுவினர் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரிலீஸுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே UKவில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியது. 

ஆரம்பம் முதலே டிக்கெட்டுகள் முன்பதிவில் UK ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்த நிலையில் வழக்கமாக இதற்கு முன்பு வெளிவந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு நிகழ்த்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை தற்போது ரிலீசுக்கு முன்பே UKவில் லியோ திரைப்படம் முறியடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், இப்போதே டிக்கெட்டுகள் முன்பதிவில் UKவில் 50,000 டிக்கெட்டுகளுக்கும் மேல் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக UKவில் லியோ திரைப்படத்தை வெளியிடும் அஹிம்ஷா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த அறிவிப்பு இதோ…
 

Ivan vettaikku setharanum bayandhu! Even after selling over 50,000 tickets for Oct 19-22, the #LEO hype isn’t slowing down. More shows and theatres — on the way 💥💥💥

Book UK tickets 👉 https://t.co/KYkytsJ4VT pic.twitter.com/lU23bTFHl0

— Ahimsa Entertainment (@ahimsafilms) October 8, 2023