"லோகேஷ் சந்தோஷத்துல பேக்கப்னு சொல்லிட்டார்"- தளபதி விஜயின் லியோ பட லிப்லாக் காட்சி பற்றி பகிர்ந்த மனோஜ் பரமஹம்சா! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ பட லிப்லாக் காட்சி பற்றி பேசிய மனோஜ் பரமஹம்சா,manoj paramahamsa about thalapathy vijay trisha lip lock in leo movie | Galatta

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா இடையிலான எமோஷனலான காட்சியில் இடம்பெற்ற லிப் லாக் குறித்தும் அந்த காட்சியின் ஆச்சரியங்கள் குறித்தும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா நமது கலாட்டா தமிழ் சேனலில் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும்போது,

“எனக்குமே இது ஆச்சரியமாகத்தான் இருந்தது இது டேக்கில் தான் நடந்தது எப்படி இது நடந்தது…” என்றார். தொடர்ந்து அவரிடம், "சரியாக அந்த நொடியில் குழந்தை எழுந்து விடும் என்று எப்படி தெரிந்தது?" எனக் கேட்டபோது, "அதிகமாக சத்தமிடும் போது எந்திரிக்க வேண்டும் அதுதான் அதனுடைய க்ளூ. ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் குழந்தை எழுந்ததும் இவர் டக்கென்று எழுந்து சென்று குழந்தைக்கு பாட்டை பாடிவிட்டு திரும்ப வந்து அதே உணர்வுகளோடு அமர்ந்தது தான். நானே அதை எதிர்பார்க்கவில்லை எங்கள் அனைவருக்கும் அது ஒரு ஆச்சரியமாகத்தான் இருந்தது. த்ரிஷா மேடம் வருவார்கள் குழந்தை எழுந்து விடும் அந்தக் குழந்தையை சமாதானம் செய்வார் பிறகு மீண்டும் அது தொடரும் என்று தான் இருந்தது. இவர் எழுந்து சென்று குழந்தைக்கு பாடலை பாடிவிட்டு திரும்ப வந்து அந்த உணர்வுகளுடன் அமர்வார் என்று ஸ்கிரிப்ட்டில் கூட கிடையாது இதை அவர் நேரில் எதிர்பாராத விதத்தில் செய்தார். அதுதான் எங்களுக்கு மிக ஆச்சரியத்தை அளித்தது." என்றார். மேலும் அவரிடம், "விஜய் சார் மற்றும் த்ரிஷா மேடம் இருவருக்கும் லிப்லாக் காட்சி இருந்தது கிட்டத்தட்ட மகாநதி படத்தில் கமல் சார் மற்றும் சுகன்யா பேசிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்குள் ஒரு தீவிரமான வாதம் நடந்து கொண்டிருக்கும் எல்லாரையும் எல்லாவற்றையும் மறக்க வைத்துவிடும் இதிலும் அதே போல் ஒரு விஷயத்தை பார்க்க முடிந்தது. நிறைய நாட்களுக்குப் பிறகு அனைவருக்கும் இதுவும் ஒரு ஆச்சரியமாகத்தான் இருந்தது என்னடா லிப்லாக் சீன் வைத்திருக்கிறார்கள் என்று…" எனக் கேட்ட போது, " "அந்த காட்சி இருக்கு என்று எனக்கு தெரியும் ஆனால் அதற்கு முன் அவர் அந்த வரியை சொல்லவார் என்பது எனக்கும் ஆச்சரியம் தான். அந்த மௌன ராகம் படத்தில்… வருகிற அந்த விஷயம் அவர்கள் செய்தது ஒரு சர்ப்ரைஸ் தான் சாதாரணமாக அவர்கள் எதுவும் சொல்லாமல் அந்த காட்சியை சேர்ந்திருந்தால் கூட கமல் சாரோட ஒரு தாக்கம் என்று கூறலாம். ஆனால் அவர் தீண்டத்தகாத முறையில் உச்சத்தை அடையும் போது தான் வேற வழி இல்லாமல் முத்தத்தை பகிர்கிறார் அது மட்டும் இல்லாமல் எழுத்தும் மிக அருமையாக தான் இருந்தது அதுவும் வித்தியாசமாக இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.  மற்ற சாதாரண முத்த காட்சிகள் போல் இதுவும் இது விடக்கூடாது என்று இதை நாங்கள் நிழல் முறையில் எடுத்தோம் அவர்கள் என்னதான் முத்தங்களை பகிர்ந்தாலும் இன்னுமும் அவர்களின் அந்த சூழ்நிலைக்கு விடிவு வரவில்லை ஒரு இருட்டில் தான் இருக்கிறார்கள் அதை வெளிப்படுத்தும் விதமாக அந்த காட்சியை வடிவமைத்தது எங்களுக்கு சிறப்பாக இருந்தது. எங்களுக்கு ரொம்ப பிடித்தது என்னவென்றால் அந்த நிழல் முறை காட்சியை அவர் மிக உற்சாகமாக செய்தார் அந்த ஷாட்டை எங்கும் கட் செய்யாமல் இதே ஆங்கில் வைத்து செய்துவிடலாம் என்று சொல்லியிருந்தார். சாதாரணமாக ஒரு ஆறு நிமிட காட்சியை எடுத்து விட்டு அது நன்றாக வந்தது என்றால் டைரக்டர் அதை பார்த்துவிட்டு கட் என்று சொல்வார்கள். ஆனால் இந்த காட்சியை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் பேக்கப் என்று சொல்லிவிட்டார்.”  
என தெரிவித்தார். அந்த முழு பேட்டி இதோ…