'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முதலாளி'- தளபதி விஜயின் லியோ தயாரிப்பாளர் SSலலித்குமாருக்கு படக்குழுவின் பிளடி ஸ்வீட் வாழ்த்து இதோ!

தளபதி விஜயின் லியோ தயாரிப்பாளருக்கு படக்குழுவின் ஸ்பெஷல் வாழ்த்து,vijay in leo crew bloody sweet wishes to producer ss lalit kumar | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தொடர்ந்து அட்டகாசமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சசிகுமாரின் அசுரவதம் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய தலித் குமார் அவர்கள் தனது இரண்டாவது படமாக தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தார் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் & காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சீயான் விக்ரமின் மகான் & கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

இந்த வரிசையில் லலித் குமார் அவர்களின் தயாரிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

50% தளபதி விஜய் படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் லியோ படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 6 மாதங்களிலு 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.லியோ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அவருக்கு திரையுலகையைச் சார்ந்த பிரபலங்களும் லியோ படக்குழுவினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லியோ படக்குழுவினர் படப்பிடிப்பில் தளபதி விஜய் உடன் தயாரிப்பாளர் லலித்குமார் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி எங்களது சாக்லேட்டுகளில் சர்க்கரையை நீங்கள் தான் &  எங்களது டோனட்களில் ஸ்பிரிங் நீங்கள் தான். உங்களது இனிமையான தன்மையும் ஆதரவும் தான் லியோ பயணத்திற்கு உத்வேகம் கொடுக்கிறது" எனக் குறிப்பிட்டு தங்களது பிளடி ஸ்வீட் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் மற்றும் வாழ்த்து இதோ…
 

Iniya pirantha naal vaazhthukal mudhalali 😁

From all of us at Team #Leo - You've been the sugar in our chocolates & the sprinkle on our donuts. Your sweetness & support have lit up Leo’s journey 🍫

May this year be filled with even more smiles and successes ❤️… pic.twitter.com/1cXmDYVZ5m

— Seven Screen Studio (@7screenstudio) August 9, 2023