தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களின் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து  3வது திரைப்படமாக அஜித் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஒரே சமயத்தில் ரிலீசாக இருப்பதால் இந்த பொங்கலை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றன. முன்னதாக துணிவு துறை படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் ஆனது.

தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், துணிவு படத்தின் அடுத்த பாடலாக காசேதான் கடவுளடா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் குமாரின் மங்காத்தா ஸ்டைலில் MONEY MONEY MONEY என வந்த அட்டகாசமான அந்த பாடல் இதோ…