ரேடியோ ஜாக்கியாக பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்களை மகிழ்வித்த RJ.பாலாஜி LKG திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். இதனை அடுத்து RJபாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் வீட்ல விசேஷம் திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து RJ.பாலாஜி கதாநாயகியாக நடித்துள்ள த்ரில்லர் திரைப்படமான ரன் பேபி ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்தில் RJ.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில், RJபாலாஜி உடன் இணைந்து பிக் பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை SYMBOLICஆக அறிவிக்கும் வகையில் தாடியுடனும் கிளீன் ஷேவ் உடனும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு RJ.பாலாஜி தெரிவித்துள்ளார். RJ.பாலாஜியின் அந்த பதிவு இதோ…
 

And its a wrap for #SingaporeSaloon ! ❤️
In theatres, Summer 2023 !😍 pic.twitter.com/QC8aS6oYoI

— RJ Balaji (@RJ_Balaji) December 18, 2022