தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் & மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது.

இதனையடுத்து கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பீஸ்ட படத்தில் இருந்து அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக் குத்து பாடல் யூட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டாகி வரும் நிலையில் நாளை மார்ச் 19ஆம் தேதி 2-வது பாடலாக தளபதி விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி யான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் போட்டியாளர்களான 16 குழந்தைகளுக்கும் தளபதி விஜய் "பிரியமுடன் விஜய்" என கையொப்பமிட்ட காபி கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்தோடு குழந்தைகள் அந்த காபி கோப்பைகளை வாங்கும் வைரல் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…