தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது.விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்,சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது இந்த பாடல்.

ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் பலரது favourite ஆக மாறியுள்ளது.பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் யூடியூப்பில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.