தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராகவும் பிரபல நடிகராகவும் அசத்தி வரும் GV.பிரகாஷ் குமார் அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது GV.பிரகாஷ் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் G.V.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த இடிமுழக்கம் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இசையமைப்பாளராக GV-யின் இசையில் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. மேலும் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும்  புதிய படம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரைய‌ரங்க‌ளி‌ல் ரிலீஸாகவுள்ளது GV.பிரகாஷின் செல்ஃபி திரைப்படம். DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, GV.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

இதுவரை செல்ஃபி திரைப்படத்திலிருந்து வெளிவந்த டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சென்சாரில் செல்ஃபி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.