2007 இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் தாமிரபரணி.ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவான இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிரபு,விஜயகுமார்,நதியா,நாசர்,ரோகினி,மனோரமா,கஞ்சா கருப்பு என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக பானு நடித்திருந்தார் , பின்னர் அவரது பெயரை முக்தா என்று மாற்றிக்கொண்டார்.இந்த படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.பின்னர் அழகர் மலை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்,சில மலையாள படங்களிலும் நடித்திருந்தார் முக்தா.

சீரியலிலும் ஒரு ரவுண்டு வந்த இவர் , சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலான சந்திரகுமாரி சீரியலிலும் நடித்திருந்தார்.இவர் கடந்த 2015-ல் பாடகர் ரிமி டாமியின் தம்பி ரிங்கு டாமியை திருமணம் செய்து கொண்டார்.அதன் பின் படங்களில் நடிப்பதை சற்று குறைத்து விட்டு வீட்டு வேலை, கணவரை கவனிப்பது என்று இறங்கினார் முக்தா.

இன்று இவர்கள் திருமணம் செய்து கொண்டு 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக்தா, தனது கணவருடன் ரொமான்டிக் முத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்