தமிழ் திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. 

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைஃப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், பேஷனுக்காக பிடித்தவற்றில் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார். 

இந்த கொரோனா ஊரடங்கில் கூட அஜித் ஆலோசனை செய்த தக்ஷா குழு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு அசத்தி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள ரெட் ஸோன் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தால் வைரசை அழிக்க முடியும் என்று நடிகர் அஜித்குமார் யோசனை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் அஜீத் அரசியலுக்கு வர போகிறார். அவர் வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது என ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அடித்து கூறியுள்ளார். பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேசிய அவர், அஜித்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியுள்ளார். அரசியல் குறித்த காட்சிகளை கூட தனது படங்களில் வைக்காத அஜீத், எப்படி அரசியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் தல ரசிகர்கள். 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் அறிமுகமாகி, ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற பிறகு, அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே நீங்க எப்போ அரசியல் வரீங்க ? என்பது தான். சினிமாவும் ஒருவிதமான பணி தான். ரசிகர்களை மகிழ்விக்க நடிகர்கள் படும் சிரமம் ஏராளம். நடிகர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று ஒரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.