தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் முன்னாள் ஆந்திர மாநில முதல்வராகவும் இருந்த மறைந்த திரு.என்டி.ராமராவ் அவர்களின் ஆறாவது மகனான நந்தமூரி பாலகிருஷ்ணா  பல ஆண்டுகளாக தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பரம வீர் சக்ரா, ஸ்ரீராமராஜ்யம், லெஜெண்ட், லயன், டிக்டேட்டர் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக தமிழ்  திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ரூலர் திரைப்படத்தில் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இதையடுத்து நந்தமுரி பாலகிருஷ்ணா அடுத்து திரைப்படத்திற்காக தெலுங்கு திரையுலகமே காத்திருந்த நிலையில் இன்று அவரது 60வது பிறந்தநாளில் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

NBK 107 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.NBK 107 திரைப்படத்தின் மிரட்டலான போகும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோபிசந்த் மலிநேனி இத்திரைப்படத்தை இயக்க தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இசையமைப்பாளர் தமன் திரைப் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கடைசி திரைப்படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ரூலர் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள அடுத்த படத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.