கொரோனா வைரஸ் உலகத்தையே கடந்த 2019 இறுதி முதல் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.பல உயிர்கள் இந்த நோயால் பிரிந்தன.2020-ல் உலகில் பல தொழில்களை ஸ்தம்பிக்க செய்தது இந்த கொரோனா வைரஸ்.

2020 பாதியில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.இந்த நேரத்தில் கொரோனாவிற்கு சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இன்னும் எந்த அளவு மருந்து நோயை குணப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்த வருடம் அதே போல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதே போல உலகம் முழுவதும் பல இடங்களில் லாக்டவுன் என்று கொண்டுவந்தது.இதனால் மீண்டும் எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டன.

தற்போது நிலைமை கொஞ்சம் சரி ஆகி வரும் வேளையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.அதில் சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங்குகள் 100 நபர்களுடன் நடத்தலாம் என்பதும் உள்ளடங்கும்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரிய சிறிய படங்கள் சீரியல் ஷூட்டிங்குகள் என்று அனைத்தும் நாளை முதல் நடக்கலாம் என்பதால் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக திரைத்துறையினர் தொடங்கியுள்ளனர்.