இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..

இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விவரம் உள்ளே - Actor ashish vidyarthi about his second marriage | Galatta

சிறந்த குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தன் பாணியில் நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களை கவர்ந்த ஆஷிஷ் வித்யார்த்தி தமிழில், கில்லி, ஏழுமலை, பகவதி, ஆறு, அனேகன் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரும்பாலும் இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு சிலர் இவரது இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து கூறியும் சிலர் 60 வயது எட்டும் நிலையில் இரண்டாவது திருமணமா என்று விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாக தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. அந்த வீடியோவில். “எல்லோருடைய வாழ்க்கையும் வித்யாசமானது. வித்யாசமான சவால்கள், வாய்ப்புகள், கல்வி, தொழில் என்று பல உள்ளது.  நாம் எல்லொரும் வித்யாசமான வாழ்வு முறையில் இருந்து வருகிறோம். ஆனால் நாம் எல்லோரிடமும் ஒற்றுமையாக இருக்க கூடிய ஒரு விஷயம்.. 'மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ' என்பதே..” என்றார். மேலும் தொடர்ந்து அவரது முதல் மனைவி குறித்து பேசுகையில்,

22 வருடம் முன்பு பிலூவை சந்தித்தேன். பின் திருமணம் செய்து கொண்டேன். அது அற்புதமான வாழ்க்கை. 22 வருடம் நாங்கள் முழுமையாக வாழ்ந்து விட்டோம். எங்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான் அவனுக்கு 22 வயது ஆகின்றது அவன் இப்போது வேலை செய்து வருகிறான். ஆனால் சில வருடங்களாக எதிர்கால வாழ்கை குறித்த ஒரு எண்ணம். எங்களுக்குள்ளே இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்தோம்..

நாங்கள் அதை சரி செய்து கொண்டோம். ஆனால் அந்த முயற்சி எங்களுக்குள்ளே ஏமாற்றி கொள்வது போன்று இருந்தது அது மகிழ்ச்சியை எங்களிடம் இருந்து பிரித்து விடும்.  நாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தேவைப்படுகிறது தானே..அதனால் இருவரும்  பேசி இணக்கமாக பிரிய முடிவு செய்தோம். அப்படியே நடந்தது.  ஆனால் நான் எனக்கு துணை வேண்டும் என்று நினைத்தேன். இந்த பிரபஞ்சத்தில் அவருடன் வாழ வேண்டும் என்று நினைத்தேன்.” என்றார்.  பின் தொடர்ந்து தான் தற்போது செய்து கொண்ட இரண்டாவது திருமணம் குறித்தும் தன் மனைவி குறித்தும் பேசுகையில்,

“அதன்படி நான் ரூபாலியை சந்தித்தேன். ரூபாலியுடன் நான் பேசி புரிந்து அவரை புரிந்து கொண்டேன். அவருடன் வாழ முடியும் என்று உணர்ந்தேன். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு 50 வயதாகின்றது. எனக்கு 57 ஆகின்றது. 60 கிடையாது..  இங்கு வயது ஒரு தடையே கிடையாது.. யார் வேண்டுமென்றாலும் மகிழ்ச்சியாக வாழலாம். அதனால் இதனை உங்களிடம் தெரியபடுத்த விரும்பினேன். கடந்து செல்வோம். மனிதர்கள் அவர்கள் விரும்பப்படி வாழும் வாழ்க்கையை மதிப்போம்.” என்றார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தற்போது நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Ashish Vidyarthi Avid Miner (@ashishvidyarthi1)

 

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆதித்ய கரிகாலன் மரணம்.. ரசிகர்களால் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மிக முக்கியமான காட்சி..  வீடியோ இதோ..
சினிமா

ஆதித்ய கரிகாலன் மரணம்.. ரசிகர்களால் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மிக முக்கியமான காட்சி.. வீடியோ இதோ..

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன்... ARரஹ்மானின் அதிரடியான இசை விருந்தாக வரும் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன்... ARரஹ்மானின் அதிரடியான இசை விருந்தாக வரும் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!