தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான பாட முறைகள் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளுக்கான வளர்ச்சியில் தமிழக அரசு தொடர்ந்து சில அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது.

government schools

அதன்படி, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை, அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய விதிமுறையில், ஒன்றியம் வாரியாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அந்த எல்லைக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

government schools

இதனால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் முழுக்கட்டுப்பாடும் இனி, மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வகையில், மேல்நிலைப்பள்ளி வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.