அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் டியர் காம்ரேட். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவான இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அர்ஜுன் ரெட்டி, டாக்ஸி வாலா, கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவிற்கு இந்த படம் அமோக வரவேற்பை தந்தது. 

rashmika dearcomrade

வீட்டில் சைத்தன்யாவாகவும் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்கும் காம்ரேட் பாபியாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நாயகன் விஜய்தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவிற்கென இருக்கும் வசீகர தன்மை ஃபிரேம் முழுவதும் நிரம்பி வழிகிறது. எச்செயல் செய்தாலும் அதை ஈர்க்கும் வண்ணம் செய்வது அவரது திறமை. காம்ரேட் பாபியாக வரும் நாயகன், நாயகி லில்லியுடன் காதலில் விழுந்து பின் நாயகி சந்திக்கும் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார், காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த டியர் காம்ரேட் படத்தின் கதைச்சுருக்கம்.

karthiknetha

இந்த படத்தில் இடம்பெற்ற புலராதா பாடல் உருவான விதம் குறித்து கவிஞர் கார்த்திக் நேதா பகிர்ந்து கொண்டார். மேலும் வார்த்தைகளை வடிவமைத்த விதம் குறித்து பேசியுள்ளார்.