ஷாரூக் கானின் அதிரடி நடனத்தில் ஜவான் பட முதல் பாடல்... வேற லெவல் சம்பவம் செய்த அனிருத்தின் அட்டகாசமான "வந்த எடம்" வீடியோ இதோ!

அட்லீ ஷாருக்கானின் ஜவான் பட முதல் பாடல் வந்த எடம் வீடியோ,shah rukh khan in jawan movie first single vandha edam video song out now | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரும் ஜவான் படத்தின் ஜிந்தா பிந்தா பாடலுக்கு ஷாரூக் கான் 1000 பெண் டான்ஸர்களுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். இந்த வரிசையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். 

முதல் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக களமிறங்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஜவான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஜிந்தா பிந்தா என்ற பாடலுக்கு ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து ஷாருக்கான் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த பாடலுக்கு முன்னணி நடன இயக்குனர் சோபி மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். வழக்கமாகவே இயக்குனர் அட்லீயின் திரைப்படங்களில் எக்கச்சக்க டான்ஸர்களுடன் வரும் பாடல்கள் எல்லாம் விஷுவல் ட்ரீட்டாக அமையும், குறிப்பாக தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி, மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன், பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் உள்ளிட்ட பாடல்கள் தியேட்டர்களில் கொண்டாடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது ஷாருக் கானின் ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஜிந்தா பிந்தா பாடலும் தியேட்டரில் கொண்டாடப்படும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஜவான் திரைப்படத்தின் ஜிந்தா பிந்தா முழு வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழில் "வந்த எடம்" என வந்திருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. முதல் முறை பாலிவுட்டில் களம் இறங்கி இருக்கும் அனிருத் ஸ்டைலில் வேற லெவல் சம்பவமாக வந்த இடம் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…
 

சினிமா

"DREAM PROJECT" எது?- ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் உண்மையை உடைத்த சந்தானத்தின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே

லியோ படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தில் இணைந்த சஞ்சய் தத்... பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

லியோ படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தில் இணைந்த சஞ்சய் தத்... பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த அதிரடி அறிவிப்பு இதோ!

ஹீரோ ஆன பிறகு கற்றுக் கொண்ட ஒரு விஷயம்..!
சினிமா

ஹீரோ ஆன பிறகு கற்றுக் கொண்ட ஒரு விஷயம்..!"- முதல் முறை மனம் திறந்த நடிகர் சந்தானத்தின் சிறப்பு பேட்டி இதோ!