"சுறா படம் நல்லா போகாதுனு அப்போவே தெரியும்.." நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..– Exclusive Interview உள்ளே..

சுறா படம் குறித்து சுவராஸ்யமான தகவலை தமன்னா பகிர்ந்த முழு வீடியோ உள்ளே - Actress tamannaah about Thalapathy Vijay sura movie | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு ரசிகர்கள் கொண்டாடும் கதாநயாகனாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தளபதி விஜய் என்றாலே உலகளவில் தனி கூட்டம் இருந்து வருகிறது. கொடிகளை குவித்து பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களை தளபதி விஜய் கொடுத்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியான ‘வாரிசு’ திரைப்படமும் உலகளவில் வசூலை வாரி குவித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய். ரசிகர்களின் மிகுந்த ஆவலை பெற்ற லியோ திரைப்படம் ரூ 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்று தொடர்ந்து வசூல் மன்னனாக இருந்து வரும் தளபதி விஜயின் 50 திரைப்படமாக கடந்த 2010ல் வெளியான ‘சுறா’ மிகப்பெரிய தோல்வியை அவருக்கு கொடுத்தது. தளபதி விஜயின் 50 வது திரைப்படம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தொல்வியையுமே தந்தது. இன்றும் தளபதியின் 50 வது படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.   இந்நிலையில் சுறா திரைப்படம் குறித்து அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தமன்னா அப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை நமது கலாட்டா  தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

பேட்டியில், நீங்கள் நடித்ததில் மோசமான படம் என்று எதை நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகை தமன்னா பேசியதாவது,  "நான் நடித்ததில் ரொம்ப சுமாரான படம் னா நிறைய இருக்கு..  ஆனா அதுல எனக்கு ஒரு படம் பிடிக்கும். அதில் வரும் சில காட்சிகள் ரொம்ப மோசமா இருக்கும்..  அந்த படம் ரொம்ப பிரபலம். பாடலும் ரொம்ப பிரபலம். சுறா படம் நான் பண்ணது ல மோசமான படம் னு நினைக்கிறேன். அதுல நான் ரொம்ப கேவலமா இருந்தேன்.‌  நான் இனிமே அது போல பண்ண  மாட்டேன்.. " என்றார் நடிகை தமன்னா.

மேலும் தொடர்ந்து “சுறா படம் நல்லா போகாது னு படம் எடுக்கும்போதே எனக்கு தோனுச்சு..  நிறைய படங்களுக்கு டப்பிடிப்பு பண்ணும்போதே தெரியும் அது சரியா போகாது னு.. அந்த வைப் ஏ தப்பா இருக்கும்.‌ இருந்தும் நம்ம அதுல ஒப்பந்தமாகிருக்கோம் அதுனால அதை பண்ணுவோம். எல்லாமே வெற்றி பெறும் என்று நினைச்சு பண்ண முடியாது. சில விஷயம் ஒரு நடிகராக ஒப்பந்தமான அதை முடிச்சாக வேண்டும். சினிமா என்பது பொருளாதார ரீதியா மிகப்பெரிய முதலீடு போடும் ஒரு கலை..  நிறைய பேர் நிறைய பணம் போடுறாங்க.. அதனால் அதை உணர்ந்து அந்த படத்தை முடித்து ஆக வேண்டும்." என்றார் நடிகை தமன்னா

மேலும் நடிகை தமன்னா அவரது திரைபயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சினிமா

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமா

"தனுஷின் பொல்லாதவன் பார்த்துட்டு வெற்றிமாறனுக்கு கிட்ட பேசுனேன்." நடிகை சரிதா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..

சினிமா

"நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துட்டேன்.!” பாரதிராஜா படத்தில் நடிகை சரிதாவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. - Exclusive Interview உள்ளே..