'தியேட்டரில் பார்க்கும்போது பிடிக்காமல் போகலாம் ஆனால்..'- தனது UNDERRATED படங்கள் குறித்து பேசிய தமன்னா! ஸ்பெஷல் வீடியோ

தனது திரைப்பயணத்தின் UNDERRATED படங்கள் குறித்து பேசிய தமன்னா,tamannah opens about her underrated movies in galatta fans festival | Galatta

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாகவும் முன்னணி நட்சத்திர நடிகையாகவும் திகழும் நடிகை தமன்னா அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிகை தமன்னா நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவின் ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த காவாலா பாடல் தற்போது மிகப்பெரிய ட்ரெண்டிங் ஹிட் ஆகியிருக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலா ஷங்கர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து தமன்னா நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் சுந்தர்.சி-யின் ஃபேவரட் சீரிஸான அரண்மனை சீரிஸ் படங்களின் நான்காவது பாகமாக உருவாகும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா மலையாளத்தில் பான்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற தமன்னா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தமன்னா நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, “நீங்கள் நடித்த திரைப்படங்களில் எந்த படம் UNDERRATED என நினைக்கிறீர்கள் அது உங்கள் நடிப்பில் இருக்கலாம் அல்லது மொத்த படமுமே என இருக்கலாம் இந்த படத்தை அப்படி UNDERRATED என உணர்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, “ஒரு தெலுங்கு திரைப்படம் ஊசரவல்லி என்று நினைக்கிறேன். ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்த அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் என்னுடைய UNDERRATED படம் என்று நினைக்கிறேன் இப்போதும் அந்தப் படத்திற்கு சில ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த படம் இன்னும் நன்றாக போய் இருக்கலாம் என நினைக்கிறேன். பின்னர் தேவி படம் அந்தப் படமும் நன்றாக இருக்கும் அந்த படத்திற்கும் நிறைய அன்பு கிடைத்தது ஆனால் அந்தப் படமும் UNDERRATED படமாக தான் உணர்கிறேன்.” என பதில் அளித்தார் 

தொடர்ந்து அவரிடம், “இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்த கண்ணே கலைமானே திரைப்படத்திலும் உங்களுடைய நடிப்பு மிக சிறந்தாக இருந்தது.. சமீபத்தில் அதற்காக விருது கூட பெற்றீர்கள்” என்று கேட்ட போது, “ஆமாம் ஆமாம் அதுவும் மற்றொரு UNDERRATED படம் சீனு ராமசாமி அவர்களின் படங்கள் எல்லாமே மிகவும் உறுதியாக இருக்கும். சில படங்கள் சில காலங்கள் கழித்து பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். தியேட்டரில் பார்க்கும்போது அந்த படம் பிடிக்காமல் போகலாம் ஆனால் பின்னர் பார்க்கும்போது அந்த படம் பிடிக்கும்.” என பதில் அளித்தார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் இந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

DD ரிட்டன்ஸ் - தில்லுக்கு துட்டு மாதிரியான படங்கள் பண்ண காரணம் இதுதான்... தரமான விளக்கமளித்த சந்தானம்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

DD ரிட்டன்ஸ் - தில்லுக்கு துட்டு மாதிரியான படங்கள் பண்ண காரணம் இதுதான்... தரமான விளக்கமளித்த சந்தானம்! ட்ரெண்டிங் வீடியோ

சினிமா

"DREAM PROJECT" எது?- ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் உண்மையை உடைத்த சந்தானத்தின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே

லியோ படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தில் இணைந்த சஞ்சய் தத்... பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

லியோ படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய படத்தில் இணைந்த சஞ்சய் தத்... பிறந்தநாள் ட்ரீட்டாக வந்த அதிரடி அறிவிப்பு இதோ!