சன் டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று நாயகி.இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சுஷ்மா நாயர்.மாடலாகவும்,பேஷன் டிசைனராகவும் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய இவர் அடுத்து நடிகையாக நடித்து தனது முத்திரையை பதித்தார்.

சுமங்கலி தொடரில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர்,அடுத்ததாக நாயகி தொடரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இந்த தொடரை தொடர்ந்து தனது நீண்டநாள் காதலரான கிரிக்கெட் பயிற்சியாளர் லிஜோ டி ஜானை கரம்பிடித்தார் சுஷ்மா நாயர்.

நடிப்பை தவிர குக்கிங்,பேஷன் டிசைனர் என தனது திறமைகளை நிரூபித்து கலக்கி வந்தார் சுஷ்மா.இவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் சுஷ்மா.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் சிறிய முக்கிய வேடத்தில் நடித்து தனது ரீ என்ட்ரியை கொடுத்தார் சுஷ்மா.தற்போது ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சுஷ்மா.

இவர் கன்னடத்தில் Rhymes என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தனது வெள்ளித்திரை என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித் ஜெயராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்