தமிழ் திரையுலகில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில், அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
தொடர்ந்து இந்த டிசம்பர் மாதத்தில் நாளை (3-ஆம் தேதி) ஜீவி பிரகாஷின் பேச்சுலர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதியில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி நடித்துள்ள ஜெயில் படமும் ரிலீசாகிறது. அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளனர்.DG ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், V கிரியேஷன்ஸ் சாரபில் கலைப்புலி.எஸ்.தாணு வழங்கும் செல்ஃபி படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து கலக்கும் அதிரடியான செல்ஃபி ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.