தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா கடைசியாக நடித்த திரைப்படம் சூரரைப்போற்று . தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்தார்.

தமிழில் பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வம்சம் ,கேடி பில்லா கில்லாடி ரங்கா என வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாண்டியராஜ் நடிகர் கார்த்தியுடன் இணைந்து வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்த இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா40-ஐ இயக்குகிறார். 

இதில் நடிகர் சூர்யாவுடன் நடிகை ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க நடிகர் சத்யராஜ், இளவரசு, ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர்  டி.இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா40 பற்றிய பரபரப்பான ஒரு தகவலை இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில் “சூர்யா40 அப்டேட் டியர் #அன்பானஃபேன்ஸ்,35% படம் முடிஞ்சுருக்கு .எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த Schedule லாக்டௌன் முடிஞ்சதும் start பண்ண வேண்டியது தான் Our team Ready . Title  மாஸ் ah ,Pre-Anoucement ஓட வரும் .ஜூலை வரை டைம் கொடுங்க plz”  என தெரிவித்துள்ளார். 

இயக்குனர் பாண்டிராஜின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்  பெற்றுள்ளது.விரைவில் சூர்யா 40 பற்றிய அடுத்தடுத்த  அறிவிப்புகள் ஆக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், டீசர் என ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.