“கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும்..” நெகிழ்சியான தருணங்களுடன் நடிகர் சூர்யா கொடுத்த அறிவுரை..

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் சூர்யா வைரல் வீடியோ உள்ளே - Suriya sivakumar advice to student at agaram foundation event | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. திரையுலகில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து உச்ச நடிகர்களில் ஒருவராய் இருந்து வருகிறார். திரைத்துறையில் மட்டுமல்லாமல் பொது சேவையிலும் நடிகர் சூர்யா பலருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘அகரம்’ என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இந்த கல்வி சேவையில் இருந்து வரும் இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இதிலிருந்து பயின்ற பல மாணவர்கள் இன்று பல்துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இவர் மட்டுமல்ல சூர்யா குடும்பத்தில் அவரது தந்தையும் பிரபல நடிகருமான சிவக்குமார் கடந்து 44 ஆண்டுகளுக்கு மேலாக சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பெற்றோரை இழந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், அகரம் விருது விழா நிகழ்ச்சியும்  சென்னையில் இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி மற்றும் சூர்யா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை மற்றும் அகரம் விருது வழங்கினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா அகரம் நலத்தொண்டின் நெகிழ்ச்சியான தருணத்தை மேடையில் மாணவர்களிடையே பகிர்ந்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "திருவண்ணாமலை, ஜவ்வாது மலை தொடர் பகுதியில் துணை ஆசியர் பயிற்சிக்கு படித்து முடித்த மாணவர்கள் உதவி செய்வார்கள். அப்பகுதியில் இருக்கும் மாணவர்கள் படிக்க பள்ளிக்கு அழைத்து வருவதே பெரும் சிரமம்.  அந்த ஆசிரியர் 2,3 வருஷம் அங்கு தள்ளி பயிற்சி கொடுக்கனும்.  நகரத்தில் இருக்கும் வசதி அங்கு இல்லை. அதையெல்லாம் பொறுத்து அந்த ஆசிரியர்கள் அதை செய்ய வேண்டும்.  அந்த ஆசிரியர்கள் ஒருவர் பேசியது.  "எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு.. எந்த லட்சியமும் இல்லாம இருந்துட்டேன். என்னால் மற்றவர்களுக்கு உதவியாய் இருக்க முடியும். மற்றவர்களின் வாழ்கையை மாற்ற முடியும்.‌ என்று எனக்கு புரிய வைத்தது என்னோட கணவர் தான். அவர் அகரம் மாணவர் அவர். என்று கூறினார். எனக்கு இதை கேட்டதும் அவ்ளோ சந்தோஷமா இருந்தது.” என்றார் நடிகர் சூர்யா.

மேலும் தொடர்ந்து, "இந்த அகரம் மாணவர்களில் பெரும்பாலானோர்  மாதம் முழுமையாக 3000 ரூ பார்க்காதவர்கள். அவங்க குடும்ப சூழல் அப்படி. அவர்களின் சூழலும் மோசமா இருக்கும். அவர்களுடைய சூழலை மாற்றி கொடுத்த அகரம் குறித்து சந்தோஷமாக உள்ளது.  ஒருத்தர் மாறுனா வீடு மாறும், சமூதாயம் மாறும். அதற்கு முக்கியமான காரணமா இருப்பது கல்வி. அது மூலமாகதான் வாழ்வின் மாற்றம் நிகழும். வாழ்கை மூலமா கல்வி படிக்கனும். கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும். அதனால் அந்த கல்வி சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நான் தலைவணங்கி  நன்றி கூறுகிறேன். கடந்த 3 வருஷம் அகரம் அரசுடன் பயணிப்பதால் கல்வி தேவை உள்ள மாணவர்களை கண்டறிய முடிகிறது. கடந்த 14 வருடம் எல்லோருக்கும் சமமான கல்வி கொடுக்கனும் னு பல அமைப்புகளுடன் சேர்ந்து 5200 மாணவர்களின் வாழ்வியலை மாற்றிருக்கோம்.  தற்போது அரசுடன் அதை செய்வதால் 3 லட்சம் மாணவர்களை சென்றடைய முடிந்தது." என்றார் நடிகர் சூர்யா.

மேலும் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோர் அகரம் விருது விழாவில் பேசிய முழு வீடியோ உள்ளே...