கங்குவா:'1000-1500 பேர் இருந்தாலும் கூட..'- சூர்யாவின் பிரம்மாண்ட பட இயக்குனர் சிவாவின் உழைப்பு பற்றி மனம் திறந்த KEஞானவேல் ராஜா! வீடியோ இதோ

சூர்யாவின் கங்குவா படத்தில் சிவாவின் பற்றி பேசிய KEஞானவேல் ராஜா,suriya in kanguva producer ke gnanavel raja about director siva | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் பிரம்மாண்டமான திரைப்படம் தான் கங்குவா. நடிகர் சூர்யாவின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய செலவில் அதிரடியான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். ஹாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் நட்டி என்கிற நடராஜன் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த கங்குவா திரைப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “இயக்குனர் சிவா சார் எனக்கு சிறுவயதிலிருந்தே நண்பர்… ரொம்ப வருடங்களுக்கு பிறகு சிறுத்தை படத்திற்கு பின் நாங்கள் மீண்டும் இணைந்து இருக்கிறோம் எனவே இவ்வளவு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சிவா சாருடன் இணைந்து இருப்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இப்போது எப்படி ரஞ்சித் பிரதர் உடன் ஆரம்பத்திலிருந்து பயணம் செய்கிறேனோ அதே மாதிரி தான் சிவா அவர்கள் உடனும்… இவர்கள் இருவருக்கும் சிறந்த படங்களாக இந்த படங்கள் இருக்கும் ரஞ்சித் சார் உடைய கரியரில் சிறந்த படமாக தங்கலான் படமும் சிவா சார் உடைய கரியரில் சிறந்த படமாக கங்குவா படமும் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவ்வளவு உழைப்பை இருவரும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவுமே அலட்டிக் கொள்ளாத ஒரு இயக்குனர் தான் சிவா. இவ்வளவு பெரிய விஷயம் செய்கிறோம் என்றே வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். எல்லாவற்றையும் மிகவும் சிம்பிளாக கையாளுவார் படப்பிடிப்பு தளத்தில் சண்டையோ சட்டமோ ஒரு கோபமான பேச்சுவோ எதுவுமே இருக்காது. ஒரு 1000 - 1500 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலும் கூட எந்த சத்தமும் இல்லாமல் மிகவும் நல்லபடியாக நடத்திக் கொடுப்பார். அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பு. கலை இயக்குனர் மிலன் சார் அவர்களை இந்த சமயத்தில் நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம் அவர் இந்த படத்திற்கு கொடுத்திருக்கக் கூடிய உழைப்பு சாதாரண உழைப்பு கிடையாது. படம் வந்து இருந்தால் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் பெரிய விருதுகள் எல்லாம் கிடைத்திருக்கும் இன்னும் பெரிய பெரிய படங்கள் பண்ணுவதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருக்கும். உண்மையிலேயே அவரை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம். அவருடைய சிறந்த துணையாக இருக்கும் மரியா மேடம் படத்தை உடனிருந்து நல்லபடியாக பணியாற்றி கொடுக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் மொத்த டிசைனிலுமே அவர் பணியாற்றி இருக்கிறார் .அவர்களுக்கும் இந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் இந்த தருணத்தில் மிலன் சாரை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம்.” என பேசி இருக்கிறார். அந்த சிறப்பு பேட்டி இதோ…