வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டார்: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ரிவ்யூ முடித்து கிளம்பும்போது மறைந்திருந்து கொடூரமாக தாக்கிய மர்ம நபர்! விவரம் உள்ளே

பிக் பாஸ் வனிதா விஜயகுமாரை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்,vanitha vijayakumar brutally attacked by stranger | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளின் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்டார். தனது சகோதரி சௌமியாவின் வீட்டில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ரிவ்யூ வீடியோவுக்கு பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது இருட்டான கார் பார்க்கிங் ஏரியாவில் மறைந்திருந்து திடீரென வந்த ஒரு மர்ம நபர் கொடூரமாக தாக்கியதில் வனிதா விஜயகுமார் காயமடைந்து இருக்கிறார். மர்ம நபர் தாக்கியதில் வனிதா விஜயகுமாரின் முகத்தில் கண், தாடை மற்றும் கண்ணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து தனது காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார் தன்னை தாக்கியது “பிரதீப் ஆண்டனி”யின் ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தாக்குதல் தொடர்பாக வனிதா விஜயகுமார் பதிவிட்டு இருக்கும் விரிவான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. 

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோதிகா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக விளையாடி வருகிறார். ஒரு தாயாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளராகவும் தனது மகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் வகையிலும் தொடர்ச்சியாக வனிதா விஜயகுமார் தனது ரிவ்யூ வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது தனது ரிவ்யூ வீடியோவை முடித்துவிட்டு கிளம்பும்போது வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டு இருக்கிறார் இது குறித்து அந்த பதிவில் தனது காயம் பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, “எனது தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். #BiggBoss7Tamil என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதை கடந்து செல்ல வேண்டிய என்ற அவசியம் எனக்கு இல்லை.” என தெரிவித்திருக்கிறார். 

Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB

— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023

மேலும் அடுத்தடுத்த பதிவுகளில், 
“என்னை கொடூரமாக தாக்கிய நபர் யார் என்று கடவுளுக்கு தான் தெரியும் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என சொல்லப்படுபவர். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் ரிவ்யூவை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்ட பின் என் காரை எடுக்கச் சென்றேன் என் சகோதரி சௌமியாவின் வீட்டில் இருட்டாக இருந்த கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி இருந்தேன் எங்கிருந்தோ ஒரு மர்ம மனிதர்கள் தோன்றினார் ரெட் கார்டு கொடுக்கிறீர்களா என சொன்னார்.
என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார் . என் முகத்தில் ரத்தம் வழிந்து கத்தினேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் சுற்றிலும் யாரும் இல்லை .நான் என் சகோதரியை கீழே வருமாறு அழைத்தேன். இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி என்னை வற்புறுத்தினாள். ஆனால் இந்த செயல்பாட்டில் நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று அவளிடம் சொன்னேன்.
நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன், தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை. என் காதுகளை ஆட்டிப்படைக்கும் பைத்தியக்காரனைப் போல சிரித்தான். நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது.”
 
எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் வனிதா விஜயகுமாரின் அந்தப் பதிவுகள் இதோ...

Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala

— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023