தளபதி 68: விறுவிறுப்பான ஆக்ஷனுக்கு ரெடியாகும் தளபதி விஜயின் அதிரடி பட அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து வெங்கட் பிரபு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

துருக்கியில் தளபதி விஜய் வெங்கட் பிரபுவின் தளபதி 68 அடுத்த கட்ட படப்பிடிப்பு,vijay venkat prabhu in thalapathy 68 movie next shoot in turkey | Galatta

நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் ஸ்பெஷலான புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டார். வேகமெடுக்கும் தளபதி விஜயின் 68வது திரைப்படமான தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக துருக்கி நாட்டில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு துருக்கியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “அதிகப்படியான அன்பு துருக்கியில் இருந்து” என குறிப்பிட்டு “#தளபதி68” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே அடுத்த கட்டமாக தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. விரைவில் தளபதி விஜய் மற்றும் நடிகர் நடிகைகள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் துருக்கி புறப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் படமாக தயாராகும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக தற்போது துருக்கியில் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது  துருக்கியில் இருந்து இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 அப்டேட் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் பதிவு இதோ...

 

 

View this post on Instagram

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த லியோ திரைப்படத்தின் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது 68வது படமாக தயாராகி வரும் தளபதி 68 படத்தில் விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்முறையாக விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார். தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக கடந்த சில தினங்களாய் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. மிரட்டலான ஆக்சன் காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்து நாட்டில் முடித்து தளபதி விஜய் சென்னை திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் தளபதி 68 திரைப்படத்தில் மதன் கார்க்கி அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார். கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடல்களின் வரிசையில் இந்த படத்திலும் மதன் கார்க்கியின் வரிகளில் தளபதி விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.