தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி நகதாநாயகனாகவும் திகழும் நடிகர் சூர்யா சிறந்த தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ரசிகர்ளுக்கு நல்ல படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலக அளவில் கவனிக்கப்பட்டது.

சூரரைப்போற்று & ஜெய்பீம் என சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் OTT யில் ரிலீஸான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸாகிறது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம். இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் திரை படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.

வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவில். இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைத்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை  ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட அதிரடி ப்ரோமோ இதோ…