அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத மிகச்சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக  தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

பிரம்மிப்பின் உச்சமாய் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணி ரத்னத்தின் கனவு படைப்பை நிஜமாக்கிய, தோட்டா தரணியின் கலை இயக்கமும், ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பலம் சேந்த்துள்ளன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே வைரல் ஹிட்டடித்தன.

ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி மூன்று நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கண்டு ரசித்த, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிகை த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து மலர்கொத்து அனுப்பியுள்ளனர். இதனை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…
suriya and jyothika wished trisha for ponniyin selvan movie mani ratnam