வாரிசு திரைப்படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்... வைரலாகும் எமோஷ்னல் பதிவு இதோ!

வாரிசு பட வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த தளபதி விஜயின் மேலாளர்,thalapathy vijay manager jagadish emotional statement on varisu success | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தற்போது ரிலீஸாகியுள்ளது. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு (தெலுங்கில் வாரசடு) படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார். 
 
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான வாரிசு திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இந்த வெற்றி குறித்து தளபதி விஜய் அவர்களின் மேலாளர் திரு.ஜெகதீஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "என்றும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு பயணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது இப்போது இங்கே இருக்கிறோம். கடின உழைப்பு மற்றும் வேட்கையின் சிறந்த கலவையாக இருக்கிறது. தில் ராஜு சார் மற்றும் வம்சி சார் அவர்களுடன் பணியாற்றியது. வேடிக்கை, உற்சாகம், வாதங்கள் மற்றும் நட்பு என அனைத்தும் கலந்தது இந்த பயணம்.  இந்தப் பயணத்தை எனது நினைவில் நிறுத்தி வைத்து பெருமை கொள்வேன். எப்போதும் போல என்னை நம்பியதற்காக மகிழ்ச்சியோடும் நன்றி கடனோடும் இருப்பேன் எனது அன்பு தளபதி விஜய் அண்ணா... லவ் யூ அண்ணா" என பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த பதிவு இதோ…
 

A memorable journey that started on 4th April 2021 and now here we are.A brilliant mix of hard work & passion working with DilRaju sir & @directorvamshi sir. A travel that was filled with fun, excitement, arguments, friendship. I would proudly freeze this journey in my memory pic.twitter.com/PeCQbAgAmq

— Jagadish (@Jagadishbliss) January 16, 2023

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதி - அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
சினிமா

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதி - அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

தளபதி விஜயின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலின் இமாலய சாதனை - இதுவரை வெளிவராத காட்சிகளுடன் புதிய வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலின் இமாலய சாதனை - இதுவரை வெளிவராத காட்சிகளுடன் புதிய வீடியோ இதோ!

ஆட்ட நாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட BOX OFFICE வசூல் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ஆட்ட நாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட BOX OFFICE வசூல் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!