தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டராக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் துணிவு. மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.

முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படம் ரெட் ஜெயன்ட் மூவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடாத ஜனவரி 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக தயாராகி இருக்கும் துணிவு படத்திற்கு சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய சுப்ரீம் சுந்தர் துணிவு திரைப்படத்தின் பிரம்மிப்பான சண்டை காட்சிகள் குறித்து மனம் திறந்து பேசினார். அந்த வகையில் பேசும் போது, “நான் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலும் 360 டிகிரி ஸ்டண்ட் காட்சிகள் வைப்பது வழக்கம். ஃபேண்டஸியாகவும் நன்றாகவும் இருக்கும் என்ற காரணத்தினால் எனது ஒவ்வொரு திரைப்படத்திலும் அது தொடர்ந்து இடம்பெறுகிறது அந்த வகையில் துணிவு திரைப்படத்திலும் அது மாதிரியான ஒரு 360 டிகிரி ஷாட் திட்டமிட்டோம் அஜித் சாருடன் 5 பேர் நடிக்கும் அந்த சண்டைக்காட்சி 32 நொடிகள் சிங்கிள் ஷாட்டில் எடுக்க வேண்டும் இயக்குனர் கேட்டுக் கொண்டதால் நான்கு பேராக மாற்றப்பட்டு மீண்டும் அந்த காட்சியை கோரியோகிராப் செய்த போது அது ஒரு 25 நொடிகள் வந்தது. அதைப் பார்த்த இயக்குனர் மாஸ்டர் இதை அஜித் சாரிடம் சொல்லிப் பாருங்கள் அவர் வேண்டாம் என்றால் வேறு ஏதாவது செய்யலாம். ஏனென்றால் இது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ஏதாவது ஒரு தவறு நடந்தால் மீண்டும் முதலில் இருந்து எடுக்க வேண்டும் என்றார். இந்த காட்சியை சிங்கிள் ஷாட்டில் தான் செய்ய வேண்டும். பின்னர் அஜித் சார் வந்தவுடன் இன்று என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என்று கேட்டார். இந்த காட்சியை விவரித்தோம் மிகுந்த உற்சாகத்தோடு வாங்க பண்ணலாம் என்றார். முதல் நான்கு டேக்குகள் சரியாக வரவில்லை. ஃபோக்கஸ் மிஸ் ஆவது, துணை நடிகர்களின் தவறு என ஏதாவது ஒரு காரணத்தினால் அந்த காட்சி சரியாக வரவே இல்லை. அப்போது அஜித் சாரிடம் சென்று சார் உங்களுக்கு கம்ஃபர்ட்டபிளாக இருக்கிறதா? இல்லையென்றால் வேறு மாதிரி செய்யலாம் என கேட்டேன். அப்போது அவர் 10 டேக் ஆனாலும் கண்டிப்பாக பண்ணலாம் என்றார். தொடர்ந்து செய்தோம் பத்து டேக்குகள் தாண்டியது. 13 வது டேக்கில் அந்த காட்சி சரியாக வந்தது" என குறிப்பிட்டுள்ளார். துணிவு படத்தின் ஆக்ஷன் காட்சி குறித்து ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் பேசி இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த முழு பேட்டி இதோ…