"மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்!"- தளபதி விஜயின் லியோ படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து! ட்ரெண்டாகும் வீடியோ இதோ

தளபதி விஜயின் லியோ படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து,superstar rajinikanth wishes to thalapathy vijay in leo movie success | Galatta

தூத்துக்குடியில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த ஓரிரு தினங்களில் வெளிவர இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டராக பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனை படைத்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இன்றைய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவெடுத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 அடுத்த 2024 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்பது இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதனிடையே ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் தற்போது தனது 170 வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம்,லியோ திரைப்படம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “நிச்சயமாக லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என என்னுடைய வாழ்த்துக்கள். மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தின் இயக்குனரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் லியோ திரைப்படம் அடுத்த ஓரிரு தினங்களில் ஆயுத பூஜை வெளியீடாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. 

தளபதி விஜய் உடன் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மிரட்டலான காட்சிகளோடு வந்திருக்கும் லியோ படத்தின் டிரைலர் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ரிலீசுக்காக எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தளபதி விஜயின் லியோ படத்திற்காக தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோ இதோ
 

லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடையணும்னு என்னுடைய வாழ்த்துக்கள் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி! #Rajinikanth𓃵 #ThalapathyVijay #LEO #Thalaivar170 #SuperstarRajinikanth #Anirudh #LokeshKanagaraj #LeofromOct19 #Galatta pic.twitter.com/kvPCHJxLW0

— Galatta Media (@galattadotcom) October 16, 2023