'தி கிங்' வரதராஜ மன்னார்!- ப்ரித்விராஜின் பிறந்தநாள் பரிசாக பிரபாஸின் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படக்குழு வெளியிட்ட அதிரடியான புது GLIMPSE இதோ!

ப்ரித்விராஜின் பிறந்தநாள் பரிசாக சலார் படக்குழு வெளியிட்ட போஸ்டர்,prithviraj birthday special poster revealed from salaar part 1 ceasefire | Galatta

ப்ரித்விராஜின் பிறந்தநாள் பரிசாக பிரபாஸின் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படக்குழு அதிரடியான புதிய GLIMPSE ஒன்றை வெளியிட்டுள்ளது.மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் பிரித்விராஜ் இன்று (அக்டோபர் 16) தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வெறும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் நடிகர் பிரித்விராஜ் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து தனது திரைப்படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக ஆடுஜீவிதம் படம் தயாராகி வருகிறது. புகழ்பெற்ற மலையாள நாவலான ஆடுஜீவிதம் நாவலை தழுவி அதே பெயரில் தயாராகி வரும் இந்த ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே இயக்குனராக தனது இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் இரண்டாவது பாகமாக L2- எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கி வருகிறார். இந்த வரிசையில் கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி, சப்தகிரி ஆகியோர் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 1, கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படங்கள் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 28ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 22ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் பிரித்வி ராஜின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தின் மிரட்டலான புதிய போஸ்டரை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். பிரித்விராஜின் சலார் புதிய போஸ்டர் இதோ...
 

Wishing ‘𝐕𝐚𝐫𝐝𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 𝐌𝐚𝐧𝐧𝐚𝐚𝐫’ 𝗧𝗛𝗘 𝗞𝗜𝗡𝗚 @PrithviOfficial, a majestic birthday.#HBDVardharajaMannaar #HBDPrithvirajSukumaran#SalaarCeaseFire #Salaar @SalaarTheSaga #SalaarCeaseFireOnDec22 pic.twitter.com/hNDdna6CNQ

— Hombale Films (@hombalefilms) October 16, 2023