இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்34 படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் & சமுத்திரக்கனி... சர்ப்ரைஸாக துப்பறிவாளன் 2 அப்டேட் கொடுத்த விஷால்!

விஷால்34 படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் & சமுத்திரக்கனி,Gautham menon samuthirakani joins in vishal 34 | Galatta

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்த ஆக்சன் படமாக தயாராகி வரும் விஷால் 34 திரைப்படத்தில் இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னாடி பதிப்பதாக அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ந்து அதிரடியான ஆக்சன் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வெளிவந்து. பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக உருவாகும் #விஷால்34 திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கிறார் விஷால். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரியுடன் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் படப்பூஜை நடைபெற்றது. பிரபல தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் யானை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இந்த விஷால் 34 படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். M.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவில், உருவாகும் அதிரடி படமான விஷால் 34 படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் விஷால் 34 திரைப்படத்தில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் நடிகர்களுமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இது குறித்து நடிகர் விஷால் தனது X பக்கத்தில், விஷால் 34 படத்தின் இயக்குனர் ஹரி, இயக்குனர் கௌதம் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் உடன் இணைந்திருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டு, "பன்முகத் திறமை கொண்ட 3 இயக்குனர்கள் உடன் இணைந்து இருக்கும் மிகவும் அரிதான, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புகைப்படம். இயக்குனர் ஹரி சார் இயக்கத்தில் உருவாகும் விஷால் 34 படத்திற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ப்ரோ மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி அண்ணா இருவரையும் வரவேற்கிறேன். இந்த புகைப்படத்தை மீண்டும் அடுத்த ஆண்டு நான்கு இயக்குனர்கள் என மாற்றி பதிவிடுவேன். அந்த தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். துப்பறிவாளன் 2... விரைவில் வருகிறேன்." என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் அதன் இரண்டாவது பாகமான துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் விரைவில் இயக்குனராகவும் விஷால் அவதாரம் எடுக்கிறார். இந்த துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால்34 படப்பிடிப்பு தளத்திலிருந்து தற்போது நடிகர் விஷால் பதிவிட்டு இருக்கும் அந்த வைரல் புகைப்படம் மற்றும் பதிவு இதோ…
 

Standing with three multi talented directors in one photo is a rarity and a must keep for ever. Welcome on board @menongautham bro and Kani anna in #Vishal34 directed by Hari sir. Gonna post this photo again next year and changing the no to four directors. :) :)

Looking forward… pic.twitter.com/jd37daz5SJ

— Vishal (@VishalKOfficial) October 15, 2023