சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பத்தி தெரியனுமா? ஜாஃபர் கிட்ட கேளுங்க… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட கலக்கலான ப்ரோமோ இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட கலக்கலான ப்ரோமோ,Superstar rajinikanth jailer movie special promo video nelson | Galatta

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருக்கும் டைலர் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக ஜெயிலர் படம் பற்றி ஜாஃபரிடம் கேளுங்கள் என கலக்கலான புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படபிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார். 

இதனையடுத்து மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. 

சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோவான ஜெய்லர் ஷோகேஸ் வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் சிறந்த VOME BACK படமாக ஜெயிலர் திரைப்படம் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து வெளிவந்த ஒவ்வொரு புரோமோ வீடியோக்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தற்போது புதிய புரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாஃபர், அவரை அவரே பேட்டி எடுக்கும் வகையில் கலகலப்பான காமெடி ப்ரோமோ வீடியோவாக தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இந்த புது புரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Want to know more about #Jailer?😉 Listen to @JafferJiky😎

Are you excited to enter the world of #Jailer? Meet Muthuvel Pandian on August 10th💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnanpic.twitter.com/8o3m8a3gdx

— Sun Pictures (@sunpictures) August 7, 2023